உண்மையான நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறார்கள்: சீன வெளியுறவு அமைச்சர்
2024-01-17 15:16:29

ஜனவரி 16ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ துனிசியாவிலிருந்து புறப்பட்டு, அழைப்பின் பேரில் டோகோவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

டோகோ ஒரே சீனா கொள்கையை உறுதியாக கடைப்பிடித்து, தைவான் பிரச்சினையில் சீன அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது என்றும், உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது, தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும், தைவான் பிரச்சினை சீனாவின் உள்விவகாரம் ஆகியவை குறித்து, டோகோ அரசு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் வலியுறுத்தியது என்றும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ராபர் டீசல் தெரிவித்தார்.

வாங் யீ கூறுகையில், உண்மையான நண்பர்கள் முக்கிய நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறார்கள். சீனாவின் நியாயமான நிலைப்பாட்டை ஆதரித்த டோகோவிற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும், இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காப்பதில் டோகோவிற்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.