சீனத் தலைமையமைச்சர்- சிங்கப்பூர் அரசுத் தலைவர் சந்திப்பு
2024-01-17 10:55:43

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜனவரி 16ஆம் நாள் தாவோஸில் சிங்கப்பூர் அரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்னமைச் சந்தித்துப் பேசினார்.

லீ ச்சியாங் கூறுகையில், கடந்த ஆண்டில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்குத் தலைமையில், இரு நாட்டு உறவு, பன்முக, உயர் தரம் மற்றும் தொலைநோக்குத் தன்மை வாய்ந்த கூட்டாளி உறவாக உயர்ந்துள்ளது. சிங்கப்பூருடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று உயர் நிலை நெடுநோக்கு நம்பிக்கையை நிலைநிறுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்பை விரிவாக்கி, பல்வேறு துறைகளில் அனுபவங்களையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தி, இரு நாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் புதிய சாதனைகளைத் தொடர்ந்து பெற சீனா விரும்புவதாக லீ ச்சியாங் தெரிவித்தார்.

தைவான் பிரச்சினை பற்றிய சீனாவின் கோட்பாட்டையும் நிலைப்பாட்டையும் லீ ச்சியாங் விளக்கினார். அது பற்றி ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்று, தைவான் சுதந்திர சக்திகளின் கூற்றுக்களையும் நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் உறுதியாக எதிர்க்கின்றது என்று சண்முகரத்னம் தெரிவித்தார்.