சீன-நவ்ரு தூதாண்மை உறவு மீண்டும் துவங்குவது பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-01-17 17:02:19

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜனவரி 17ஆம் நாள் கூறுகையில், சீன-நவ்ரு தூதாண்மை உறவு மீண்டும் துவங்குவது பற்றிய விவரமான தகவல்கள் உகந்த நேரத்தில் வெளியிடப்படும் என்றார். ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு அரசு ஏற்றுக்கொண்டு, தைவானுடன் “தூதாண்மை உறவை” துண்டித்து, சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கியது. இது நவ்ரு மக்களின் விருப்பத்தைப் பின்பற்றியதுடன், நவ்ருவின் நிரந்தர நலன்களுக்கும் பொருந்தியது என்றார்.

மேலும், ஒரே சீனா கோட்பாட்டின் அடிப்படையில் இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தை திறந்து வைக்க சீனா விரும்புகிறது. சமத்துவம், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி பெறுதல், திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை ஆகிய அடிப்படைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.