அயர்லாந்தில் சீனத் தலைமை அமைச்சரின் அரசு முறை பயணம் துவக்கம்
2024-01-17 10:15:21

அயர்லாந்தின் தலைமை அமைச்சர் லியோ வரத்கரின் அழைப்பையேற்று, சீனத் தலைமை அமைச்சர் லிச்சியாங் ஜனவரி 16ஆம் நாளிரவு டப்ளின் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்து அயர்லாந்தில் அரசு முறை பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். மாறுபட்ட வரலாறு, பண்பாடு மற்றும் அரசியல் அமைப்பு முறையுடன் கூடிய நாடுகளிடையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியாக சீனாவும் அயர்லாந்தும் மாறியுள்ளன என்று லிச்சியாங் கூறினார். இரு நாட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு வளர்ச்சியில் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. அயர்லாந்துடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை அமல்படுத்தி ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் சீன-அயர்லாந்து நெடுநோக்குக் கூட்டாளியுறவு புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னெடுக்க சீனா விரும்புவதாக லிச்சியாங் தெரிவித்தார்.