சிச்சுவான் வடிநிலத்தில் பெரிய இயற்கை எரிவாயு வயல் கண்டறியப்பட்டது
2024-01-17 19:06:15

Sinopec குழுமம் வெளியிட்ட தகவலின்படி, சிச்சுவான் வடிநிலத்தில் அமைந்துள்ள ஹேசிங்ட்சாங் இயற்கை எரிவாயு வயலில் புதிதாக கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு படிவு 13 ஆயிரத்து 301 கோடியே 20 லட்சம் கன மீட்டரை எட்டியுள்ளது. சீனாவில் பத்து ஆயிரம் கோடி கன மீட்டர் படிவுடைய இயற்கை எரிவாயு வயல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

ஹேசிங்ட்சாங் இயற்கை எரிவாயு வயல், சிச்சுவான் மாநிலத்தின் தேயாங் நகர் மற்றும் மியன்யாங் நகரில் அமைந்துள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட படிவு, தரைக்கடியில் 4500 மீட்டர் முதல் 5500 மீட்டர் வரையான ஆழத்தில் உள்ளது. Sinopec குழுமத்தின் தென்மேற்கு எண்ணெய் பிரிவு, இப்பகுதியில் 21 புதிய கிணறுகளைத் தோண்டியுள்ளது. தினமும் ஒவ்வொரு கிணற்றின் இயற்கை எரியாவு அகழ்வு அளவு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன மீட்டர் ஆகும். 180 கோடி கன மீட்டர் உடைய இயற்கை எரிவாயு அகழ்வு திறன் புதிதாக உருவாக்கப்படும்.

தற்போது வரை, Sinopec குழுமம் சிச்சுவானில் கண்டறிய இயற்கை எரிவாயு படிவு சுமார் 3 லட்சம் கோடி கன மீட்டரை எட்டியுள்ளது. மொத்தம் 20 ஆயிரம் கோடி இயற்கை எரிவாயு அகழ்வு செய்யப்பட்டுள்ளது.