சீனாவின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றிய புதிய இயக்காற்றல்
2024-01-17 20:02:18

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் குவான்ஹுவா ஜனவரி 17ஆம் நாள் கூறுகையில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, உலகப் புத்தாகக் குறியீட்டு தரவரிசையில் சீனா 12வது இடத்துக்கு உயர்ந்தது. புதிய இயக்காற்றல், சீனாவின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றியதற்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது. அத்துடன், சந்தையின் தேவை மேம்பாட்டுடன், சீனாவில் சாதனங்களின் பயன்பாட்டு நிலைமை மீட்சியடைந்து வருகிறது என்றார்.

மேலும், 2023ஆம் ஆண்டு, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய சாதனத் தயாரிப்புத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 6.8 விழுக்காடு அதிகரித்து, தொழில் துறையின் நிதானமான மீட்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. தவிரவும், 2023ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் சீராக மீட்சியடைந்து வந்துள்ளது. குறிப்பாக, விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான இணைப்பு, பொருளாதாரச் சுழற்சி ஆகியவை மேம்பட்டு வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.