ஏற்றுமதி, முதலீடுகள் மூலம் வளர்ச்சி – ரணில் விக்ரமசிங்கே
2024-01-17 17:07:43

இலங்கையில் ஏற்றுமதி, சேவைகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியைக் கொண்டு வர அரசு கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் ஸ்விஸ்-ஆசியன் வணிக சங்க முதலீடு வாரியத்தின் வணிக வட்டமேஜைக் கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்ததாக அரசுத் தலைவர் ஊடகப் பிரிவு செவ்வாய்க்கிழமை கூறியது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட சீர்திருத்தப் பணிகளைச் சுட்டிக்காட்டிய அவர், வணிகத்துக்கு முக்கியமாக உள்ள தடைகள் மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது பற்றியும் கருத்து தெரிவித்தார்.

மேலும், நாணய நிலைத்தன்மை, பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பு, எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியை மாற்றியது உள்ளிட்ட நேர்மறைக் காரணிகளை அவர் சுட்டிக்காட்டினார்.