பிரேஞ்சு தலைமை அமைச்சருக்கு வாழ்த்து:லீ ச்சியாங்
2024-01-17 14:34:36

பிரேஞ்சு தலைமை அமைச்சராக பதவி ஏற்ற காபுரியெல் அத்தாலுக்கு சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

லீ ச்சியாங் கூறுகையில்,

சீனாவும் பிரான்சும், ஐ.நா பாதுகாப்பவையின் நிர்ந்தர உறுப்பு நாடுகளாகவும் சுதந்திர பாரம்பரியத்தைக் கொண்ட பெரிய நாடுகளாகவும் திகழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டலில், இரு நாட்டுறவு நிலையாக வளர்ந்து வருகின்றது. இவ்வாண்டு, சீன-பிரான்ஸ் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். உங்களுடன் இணைந்து, பல்வேறு துறைகளில், இரு நாட்டு ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், நிலையான நலன் தரும் இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவைக் கட்டியமைப்பதற்குப் புதிய பங்காற்றவும் விரும்புகிறேன் என்றார்.