உலகில் புகையிலைப் பயன்பாட்டு வகிதம் குறைந்துள்ளது
2024-01-17 19:04:13

உலக சுகாதார அமைப்பு ஜனவரி 16ஆம் நாள் வெளியிட்ட 2000 முதல் 2030ஆம் ஆண்டு வரை உலக புகையிலை பயன்பாட்டுப் போக்கு பற்றிய அறிக்கையின்படி, உலகில் புகையிலை பயன்பாட்டு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இவ்வறிக்கையின்படி, உலகளவில் வயது வந்தோரில் சுமார் 20 விழுக்காட்டினர் புகைபிடிக்கின்றனர். 2000ஆம் ஆண்டு இவ்விகிதம் மூன்றில் ஒரு பகுதியாகும். 2022ஆம் ஆண்டு உலகில் உள்ள வயது வந்தோரில் 124 கோடியே 50 லட்சம் மக்கள் புகையிலை பயன்படுத்தினர். அவர்களில் ஆண்கள் 100 கோடிக்கு மேல், பெண்கள் சுமார் 22 கோடியே 40 லட்சம் ஆவர்.

2025ஆம் ஆண்டில் உலகில் உள்ள வயதுவந்தோரில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை 120 கோடி வரை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தொடர்ந்து வகுத்து, புகையிலை கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.