2023ஆம் ஆண்டு ஒரு கோடியே 26லட்சம் கோடியைத் தாண்டிய சீனாவின் ஜி.டி.பி.
2024-01-17 11:14:07

2023ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார நிலைமை பற்றி சீன அரசவையின் தகவல் அலுவலகம் ஜனவரி 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பூர்வாங்க கணக்கீட்டின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 26லட்சத்து 5ஆயிரத்து 820கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 5.2விழுக்காடு அதிகமாகும். தொழிற்துறை ரீதியில், முதன்மைத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 8லட்சத்து 97ஆயிரத்து 550கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டில் இருந்ததை விட, 4.1விழுக்காடு அதிகரித்தது. இரண்டாம் நிலைத்தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 48லட்சத்து 25ஆயிரத்து 890கோடி யுவானைத் தாண்டி கடந்த ஆண்டில் இருந்ததை விட, 4.7விழுக்காடு அதிகரித்துள்ளது. மூன்றாம் நிலைத்தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 68லட்சத்து 82ஆயிரத்து 380கோடி யுவானை எட்டி 5.8விழுக்காடு அதிகரித்துள்ளது.