ஈரானிலுள்ள பயங்கரவாதிகளின் மீது பாகிஸ்தான் தாக்குதல்
2024-01-18 17:18:55

ஈரானிலுள்ள பயங்கரவாதிகளின் மீது பாகிஸ்தான் ஜனவரி 18ஆம் நாள் முற்பகல் தாக்குதல் நடத்தியது. நாட்டின் பாதுகாப்பைப் பாகிஸ்தான் பேணிக்காக்கும் மனவுறுதியை இது வெளிப்படுத்தியது. சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை பேணிக்காக்கும் விதம் பாகிஸ்தான் இன்றியமையாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையாக மதிப்பு அளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளின் மூலம் பயங்கரவாதம் உள்ளிட்ட அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, தீர்வு வழிமுறைகளைத் தேட விரும்புவதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் பலுசிஸ்தான் மாநிலத்தின் கிராமம் ஒன்றின் மீது பாகிஸ்தான் 18ஆம் நாள் நடத்திய தாக்குதலில் 7 வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர் என்று ஈரான் ஊடகம் அன்று தெரிவித்தது.