நடைபெறவுள்ள 14ஆவது தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி
2024-01-18 15:07:08

14ஆவது தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 17ஆம் நாள் முதல் பிப்ரவரி 27ஆம் நாள் வரை உள் மங்கோலியாவில் நடைபெறவுள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பிறகு பெரிய அளவிலான தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்வு நடத்துவது இது முதன்முறையாகும்.

இப்போட்டிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளன. தற்போது உள் மங்கோலியாவின் பல்வேறு போட்டி அரங்குகளிலுள்ள உள்கட்டமைப்புக்கான சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

உள் மங்கோலியாவின் ஹுலுன்பூர் நகரத்திலுள்ள ஹைலார் வட்டம், பெய்ஜிங் மாநகரின் யான்சிங் வட்டம், ஹெபே மாநிலத்தின் ஜாங்ஜியாகு நகரம் முதலிய ஏழு போட்டி பகுதிகளில் இப்போட்டி நிகழ்வு நடைபெறவுள்ளது.