ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: அந்த வார்த்தை என்னை மிகவும் தொட்டது
2024-01-18 09:03:32

2017ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் ‘மனிதகுல பொது சமூகத்தைக் கூட்டாக கட்டியெழுப்புவது’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இந்த சொற்பொழிவுக்கு உலகளவில் தொடர்ச்சியான மற்றும் ஆக்கப்பூவமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இது, பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியரும் சோமாலியாவைச் சேர்ந்தவருமான அப்திலாஹி இஸ்மைலின் மனதைத் தொட்டது. சொற்பொழிவில் ‘சொந்த வீட்டிற்கு திரும்ப சிரமம் இல்லை என்றால் யார் வெளியே அலைந்து திரிய விரும்புவர்’ என்ற அந்த வார்த்தை தற்போது வரை இன்னும் இஸ்மைலின் மனதில் பதிந்துள்ளது. அந்த வார்த்தையால், சோமாலிய மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வந்தது என்ற வரலாறு நினைவில் வந்தது என்று குறிப்பிட்ட இஸ்மைல், அமைதியின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்துள்ளேன் என்றும் கூறினார்.மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு,பொது சமுகத்தைக் கட்டியெழுப்பி அருமையான உலகத்தை உருவாக்கப் பாடுபட வேண்டுமென்று ஷிச்சின்பிங் 2024ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்து உரையில் சுட்டிக்காட்டினார். 

ஷிச்சின்பிங் இளைஞராக இருந்தபோது பணி புரிந்த இடத்தில் பயணம் மேற்கொண்ட இஸ்மைல் கூறுகையில் ‘ஷிச்சின்பிங் மக்களை முதன்மை இடத்தில் வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியரும் சோமாலியாவைச் சேர்ந்தவருமான அப்திலாஹி இஸ்மைல்

2021ஆம் ஆண்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் 30க்கும் மேற்பட்டோருடன் இணைந்து இஸ்மைல் ஷிச்சின்பிங்கிற்கு கடிதம் எழுதினார். பதில் கடிதத்தைப் பார்த்தபோது சீனாவில் வாழும் அனைவரின் மீது அக்கறை செலுத்துகிறார் என்று இஸ்மைல் கூறினார். என் தாய்நாட்டில் பழமொழி ஒன்று உண்டு. அதாவது, நிலைமையை அறிந்து கொண்டவர் தான், பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.