வெளிநாட்டுப் பயணிகளுக்கு சொகுசு பேருந்து சேவை – இலங்கை
2024-01-18 18:14:38

இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் விதம் சொகுசுப் பேருந்து சேவைக்கான ஏற்பாடுகளை அந்நாட்டு பேருந்து வாரியம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இத்திட்டம் முதலில் கொழும்பு நகரில் நன்கு அறிமுகமான நான்கு சுற்றுலாத் தலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற நகரங்களிலும் இச்சேவை படிப்படியாக விரிவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.