இஸ்ரேலின் உளவு நிறுவனத்தின் மீது தாக்குதல் தொடுத்தது:ஈரான்
2024-01-18 09:52:00

ஈராக்கிலுள்ள குர்திஷ் தன்னாட்சி பிரதேசத்தின் மீது ஈரான் தொடுத்த தாக்குதல் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்துடன் தொடர்புடையது. ஈரானின் இலக்கு மொசாத் என்று கூறப்படுகிறது. இதனை தாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹ்யான் 17ஆம் நாள் தெரிவித்தார்.

மொசாத் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஈரான் ஈராக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளது. ஈராக்கின் இறையாண்மையை ஈரான் மதிக்கிறது என்று அப்துல்லாஹ்யான் தெரிவித்தார்.