உலகிற்கு நன்மை பயக்கும் சீனப் பொருளாதாரம்
2024-01-18 19:06:26

சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான உயர் தர வளர்ச்சி, உலகிற்கு மேலதிக நன்மைகள் பயக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 18ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 2023ஆம் ஆண்டு சீனத் தேசியப் பொருளாதார செயல்பாடு பற்றிய முக்கிய தரவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகம் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, உலகிற்கு மூன்று நன்மைகளைத் தரும். முதலில், உலகப் பொருளாதாரத்துக்கு இயக்க ஆற்றலை உட்புகுத்தியுள்ளது. சர்வதேச நாணய மன்றத்தின் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு சீனப் பொருளாதாரத்தின் பங்களிப்பு 32 விழுக்காட்டை எட்டி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு மிக பெரிய இயக்கு ஆற்றலாக விளங்கும். இரண்டு, உலகப் பொருளாதாரத்துக்கு நிதானத்தன்மையை இது கொண்டு வந்துள்ளது. மூன்று, சீனா பன்னாடுகளுடன் புதிய வாய்ப்புகளைக் கூட்டாக பகிர்ந்து கொண்டுள்ளது. சீனா, 140க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகும். சீனச் சந்தை, பன்னாடுகள் கூட்டாகப் பயனடையும் பெரிய சந்தையாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.