அயர்லாந்து அரசுத் தலைவர் ஹிக்கின்ஸுடன் லீச்சியாங் சந்திப்பு
2024-01-18 09:20:47

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அயர்லாந்தின் அரசுத் தலைவர் மைக்கல் ஹிக்கின்ஸுடன் ஜனவரி 17ஆம் நாள் காலை டப்ளினில் சந்தித்துரையாடினார்.

சந்திப்பின் போது லீச்சியாங் கூறுகையில், அயர்லாந்துடன் இணைந்து ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமமாக பழகுவதில் ஊன்றி நிற்பதாக கூறினார். சீன-அயர்லாந்து தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 45ஆம் ஆண்டு நிறைவான நடப்பு ஆண்டை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களைத் தொடர்ந்து நன்கு நடைமுறைப்படுத்த சீனா விரும்புகிறது. மேலும், இரு நாடுகளிடையில் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து பரஸ்பர முக்கிய நலன்கள் மற்றும் மைய கவனங்களுக்குப் போதிய அளவில் கருத்தில் கொள்வதோடு, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு நிலை மற்றும் பயன்களைத் தொடர்ந்து உயர்த்தி ஒன்றுக்கொன்று நலன் தரும் சீன-அயர்லாந்து கூட்டாளியுறவில் மேலும் பெரிய வளர்ச்சியடைவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக லீச்சியாங் தெரிவித்தார்.

சீனத் தரப்புடன் நட்புப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்க அயர்லாந்து விரும்புவதாக ஹிக்கின்ஸ் கூறினார். மேலும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, தானிய பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட உலகளாவிய அறைக்கூவல்களை சீனாவுடன் கூட்டாக சமாளித்து இரு நாட்டு மக்களின் நட்புறவை ஆழமாக்கி அயர்லாந்து-சீன உறவின் மேலும் ஆழமான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.