2025இல் எண்ணெய் தேவை அதிகரிக்கும் – ஒபெக்
2024-01-18 18:12:52

உலக அளவில் 2025ஆம் ஆண்டில் எண்ணெய் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்றும் தினசரி 18 லட்சம் பீப்பாய் தேவைப்படும் என்றும் பெட்ரோலிய ஏற்றுமதி அமைப்பான ஒபெக் மதிப்பிட்டுள்ளது. வலுவான உலகப் பொருளாதார மீட்சி மற்றும் சீனாவில் தொடர்ந்துவரும் பொருளாதாரச் செயல்பாடுகள் ஆகியவையே இத்தேவை அதிகரிப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025இல் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.8 விழுக்காடாக உயரும் என்றும் இது நடப்பாண்டில் மதிப்பிடப்பட்டுள்ள 2.6 விழுக்காட்டை விட அதிகம் என்றும் ஒபெக் அமைப்பின் மாதாந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், எண்ணெய் விநியோகத்தைப் பொறுத்தவரை, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஒபெக் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளுக்கான உற்பத்தி தினசரி 13 லட்சம் பீப்பாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.