ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு
2024-01-18 19:05:18

ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர் அலசானே ஔட்டாரா, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் ஜனவரி 17ஆம் நாள் அபிட்ஜன் நகரில் சந்திப்பு நடத்தினார்.

அலசானே ஔட்டாரா கூறுகையில், சீனாவுடனான உறவுக்கு ஐவரி கோஸ்ட் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து, சீனாவிலிருந்து வெற்றிகரமான அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக்கூட்டத்தின் சாதனைகள் ஐவரி கோஸ்டில் செயல்படுத்தப்படுவதை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், உலகத்தில் ஒரே ஒரு சீனா உள்ளது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஐவரி கோஸ்ட் தொடர்ந்து பின்பற்றும். மைய நலன்கள் மற்றும் முக்கிய அக்கறை கொண்ட விவகாரங்களில் சீனாவுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

வாங்யீ கூறுகையில், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளுடன் நவீனமயமாக்கத்தை நோக்கி கூட்டாக முன்னேற சீனா விரும்புகிறது என்றார்.

இப்பயணத்தின்போது, ஐவரி கோஸ்ட் வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ சந்திப்பு நடத்தினார்.