சீனப் பொருளாதார வளர்ச்சி உலகத்திற்கு நன்மை
2024-01-18 11:02:01

5 விழுக்காட்டாக அதிகரித்த சீனப் பொருளாதாரம்  உலகப் பொருளாதாரத்திற்கு முக்கிய இயந்திரமாக விளங்குகிறது. இது, உலகத்திற்கு நன்மை பயக்கும் என்று பிரிட்டன் அறிஞர் மார்டின் ஜாக் அண்மையில் தெரிவித்தார். ஜனவரி 17ஆம் நாள், 2023ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதார தரவுகளை சீனா வெளியிட்டது. சீனாவின் மீதான சர்வதேச சமூகத்தின் மதிப்பீடுகளை இது மெய்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில், உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. சர்வதேச நிலைமை சிக்கலாக மாறியுள்ளது. புவியியல் அரசியல் மோதல் அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மதிப்பீடுகளின்படி, 2023ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 3.0 விழுக்காடாகும். யூரோ பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு விகிதத்தை 0.6 விழுக்காடாக ஐரோப்பிய ஒன்றியம் சரிப்படுத்தியுள்ளது. இதனிடையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலக முன்னணியில் வகித்துள்ளது.

தற்போதைய உலகத் தேவை பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. இதற்கு மாறாக, 2023ஆம் ஆண்டில், சீனாவின் சமூக நுகர்வு சில்லறை விற்பனையின் மொத்த தொகை முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது. இறுதியான நுகர்வுத் தொகையின் மூலம் சீனாவின் மொத்த பொருளாதார அதிகரிப்பு 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலகில் மிகப் பெரிய உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்த சந்தையில் சீனாவின் நுகர்வு ஆற்றல் வேகமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இது, உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு நன்மை பயக்கும்.