2023ஆம் ஆண்டில் சீராக வளர்ந்த சீனத் தொழிற்துறை பொருளாதாரம்
2024-01-19 11:32:12

சீன அரசவையின் செய்தி அலுவலகம் ஜனவரி 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு சீன தொழில் மற்றும் தகவல்மயமாக்கலின் வளர்ச்சியை அறிமுகப்படுத்தியது.

இக்கூட்டத்தில் தொழிற்துறை பொருளாதாரம் பொதுவாக மீட்சியடைந்து சீராக வளர்ந்து வருவதாகவும், தகவல் தொடர்பு தொழில் வளர்ச்சியை விரைவுப்படுத்தியுள்ளதாகவும், உயர்தர வளர்ச்சி உறுதியாக முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டில், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு 2022ஆம் ஆண்டை விட 4.6 சதவீதம் அதிகரித்தது. இவ்விகிதம் 2022ஆம் ஆண்டை விட 1 சதவீதம் அதிகமாகும். உற்பத்தி தொழிலின் ஒட்டுமொத்த அளவு தொடர்ந்து 14 ஆண்டுகளாக உலகளவில் முதலிடத்தில் உள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.