சீனாவில் தொழிற்துறை மயமாக்கத்தின் வளர்ச்சி
2024-01-19 18:52:08


சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸாவ் ட்சீகுவோ ஜனவரி 19ஆம் நாள் கூறுகையில், சீனாவில் 5ஜி தொழிலின் புத்தாக்க வளர்ச்சி ஆக்கப்பூர்வமான சாதனையைப் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதிவரை, சீனாவில் 5ஜி தொழில் நிலையங்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 77 ஆயிரத்தை எட்டியது. இணைய அடிப்படை மேலும் வலுப்படுத்தப்பட்டு, தயாரிப்புத் தொழிலின் எண்ணியல்மயமாக்க வளர்ச்சிப் போக்கு விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதிவரை, 421 தேசிய நிலை முன்மாதிரியான தொழிற்சாலைகளும், 10 ஆயிரத்துக்கும் மேலான எண்ணியல்மயமாக்க பணி களங்கள் மற்றும் நுண்ணறிவார்ந்த தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

அடுத்த கட்டத்தில், தொழிற்துறை இணையத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான வழிகாட்டல் பற்றிய அறிக்கை வெளியிடப்படும். எண்ணியல் பொருளாதாரத்துக்கும் உண்மைப் பொருளாதாரத்துக்கும் இடையிலான ஒன்றிணைப்பு மற்றும் புதிய தொழிற்துறை மயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு மேலும் வலிமையான ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.