உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவரின் பயணம் குறித்து சீனா கருத்து
2024-01-19 17:55:41

உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் மிர்ஸியோயெவ் ஜனவரி 23 முதல் 25ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீன-உஸ்பெகிஸ்தான் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 32 ஆண்டுகளில், இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, நன்மையும் வெற்றியும் பெற்றுள்ளன. இரு நாட்டுறவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு பயன்மிக்கது. இரு தரப்பும் தத்தமது நாட்டின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதோடு, மத்திய ஆசியா ஏன் உலகின் அமைதி மற்றும் நிதானத்துக்கும் கூட இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளன என்று தெரிவித்தார்.

மிர்ஸியோயெவின் பயணத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை இரு தரப்பும் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளன. பயணத்தின் போது, பண்பாடு, கல்வி, உள்ளூர் பிரதேச ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளை இரு தரப்பும் நடத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை பன்முகங்களிலும் ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.