இலங்கை சமூக நலத் திட்டத்தில் 3 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
2024-01-19 17:32:12

இலங்கையின் அஸ்வெசுமா சமூக நலத் திட்டத்தில் புதிதாக 3 லட்சம் குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதி, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 17 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்து வருவதாக தற்காலிக நிதியமைச்சர் ஷேஹன் செமசிங்கே தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் விரிவாக்கப்பட்டு, 24 லட்சம் குடும்பங்கள் இதில் சேர்க்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விதம் இவ்வாண்டில் 62.88 கோடி டாலர் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.