சீன மற்றும் ஐவரிகோஸ்ட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2024-01-19 10:23:00

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 18ஆம் நாள் அபித்ஜானில் ஐவரிகோஸ்ட்டு வெளியுறவு அமைச்சர் காகு ஹுவாஜா லியோன் அடோமுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

அடோமு கூறுகையில், ஐவரிகோஸ்ட்டும் சீனாவும் ஒற்றுமையுடன் பரஸ்பர உதவி அளிக்கும் நல்ல நண்பர்கள் என்றார். ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஐவரிகோஸ்ட்டு பின்பற்றுகின்றது என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர்,  சீனா-ஆபிரிக்கா ஒத்துழைப்பு தொடர்பான புதிய மன்றக் கூட்டத்தின் வாய்ப்பைக் கொண்டு, பல்வேறு துறைகளில் இருதரப்புகளின் ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை நனவாக்க ஆப்பிரிக்கா எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

வாங் யீ கூறுகையில், வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறுவதற்கான பாதையில் ஐவரிகோஸ்ட்டும் சீனாவும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகும். பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பில் இரு நாடுகள் பல சாதனைகளைப் பெற்றுள்ளன. ஐவரிகோஸ்ட்டில் "ஆப்பிரிக்க கோப்பை" போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஐவரிகோஸ்ட்டுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களின் தலைமையில், பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை முன்னேற்றி, புதிய சகாப்தத்தில் இரு நாட்டு உறவுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.