சீன-அமெரிக்க வேளாண்மை ஒத்துழைப்பு அமைப்புமுறை மீண்டும் தொடங்கும்
2024-01-20 17:18:33

சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறை அமைச்சர் டாங் ரன்ஜியான், அமெரிக்க வேளாண் துறை அமைச்சர் தாமஸ் ஜே. வில்சாக் ஆகியோரின் தலைமையில், சீன-அமெரிக்க வேளாண்மை கூட்டு ஆணையத்தின் 7ஆவது கூட்டம் ஜனவரி 18ஆம் நாள் காலை வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றது. சீன-அமெரிக்க வேளாண்மை ஒத்துழைப்பு அமைப்புமுறை மீண்டும் தொடங்குவதாக இரு தரப்பும் அறிவித்தன. மேலும், சீன-அமெரிக்க வேளாண்மை கூட்டு ஆணையம், இரு நாட்டு வேளாண்மை வாரியங்களுக்கிடையே குறிப்பிட்ட நாட்களில் பரிமாற்றம் மேற்கொள்ளும் முக்கிய வழிமுறையாக உள்ளது. இவ்வமைப்புமுறையைப் பராமரித்து நிதானமாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரு தரப்பும் வாக்குறுதி அளித்துள்ளன.

தவிரவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புத்திசாலி விவசாயம், தானியப் பாதுகாப்பு, அரசு சாரா பரிமாற்றம், வர்த்தகத்தின் வசதிமயமாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் ஆழந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.