2023-இல் சீனாவில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியீடு
2024-01-20 19:13:45

2023ஆம் ஆண்டில் சீன முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவு பற்றிய விவரங்களை சீனத் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புதவி ஆணையம் மற்றும் முன்னெச்சரிக்கை மேலாண்மை பணியகம் ஆகியவை ஜனவரி 20ஆம் நாள் வெளியிட்டன.

கடந்த ஆண்டில் சீனாவில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி, நிலநடுக்கம், புவியியல் பேரழிவு ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டது. முழு ஆண்டிலும் பலவித இயற்கை சீற்றங்களால் மொத்தமாக 9கோடியே 54இலட்சத்து 44ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில், உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 691ஆகும். 33இலட்சத்து 44ஆயிரம் பேர் பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்டனர். சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவு ஒரு கோடியே 5இலட்சத்து 39ஆயிரத்து 300 ஹெக்டர் ஆகும். மேலும், 34ஆயிரத்து 545கோடி யுவான் மதிப்பிலான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.