புதிய வங்காளதேச வெளியுறவு அமைச்சருக்கு சீன வெளியுறவு அமைச்சரின் வாழ்த்து
2024-01-20 20:08:07

வங்காளதேசத்தின் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்ற மஹ்மூத்திடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜனவரி 15ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

வாங்யீ கூறுகையில், சீனாவும் வங்காளதேசமும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகளாகத் திகழ்கின்றன. தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 49ஆண்டுகளில், இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்தல், சமமாக நடத்துதல், பரஸ்பர பலனடைதல் ஆகிய அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

மேலும், மஹ்மூத்துடன் இணைந்து, இரு நாடுகளுக்கிடையேயான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டளியுறவை புதிய கட்டத்தில் காலடி எடுத்து வைக்க முன்னேற்ற விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.