பாலஸ்தீன நாட்டை அமைக்கும் யோசனையை ஏற்க முடியாது:இஸ்ரேல் தலைமையமைச்சர்
2024-01-21 17:32:00

பாலஸ்தீன நாட்டை அமைப்பதை ஒப்புக்கொள்ள அமெரிக்காவிடம் வாக்குறுதி அளிக்கவில்லை என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நேத்தன்யஹு 20ஆம் நாள் தெரிவித்தார்.

இஸ்ரேல் தலைமையமைச்சர் அலுவலகம் அன்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடனுடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஹமாஸ் இயக்கம் அகற்றப்பட்ட பிறகு, இஸ்ரேல் காசா பகுதியில் விரிவான பாதுகாப்புக் கட்டுபாட்டை பராமரிக்க வேண்டும் என்ற தனது நிலையான நிலைப்பாட்டை நேத்தன்யஹு மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில், அமெரிக்க அரசு 19ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோன் பைடன் நேத்தன்யஹு ஆகியோர் அன்று தொலைபேசியில் தொடர்பு மேற்கொண்டபோது, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் முன்நிபந்தனையில் இரு நாடுகள் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து விவாதம் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.