இந்தியா தாய்லாந்து கடற்படையினர் கூட்டு பயற்சி
2024-01-21 19:00:06

இந்தியாவின் கடற்படையும், தாய்லாந்தின் ரோயல் கடற்படையும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் முதன்முறையாக இரு தரப்புகளிடையேயான கடல் பயிற்சியை நடத்தியுள்ளன என்று இந்தியாவின் ஊடகம் ஒன்று ஜனவரி 20ஆம் நாள் செய்தி வெளியிட்டது. அதேவேளை, இரு நாடுகள் கடல் கண்காணிப்பு விமாங்களின் மூலம் 36ஆவது கூட்டுக் கண்காணிப்பு கடமையை நிறைவேற்றியுள்ளன.

ஆயுதத் துப்பாக்கிச்சுடுதல், கடல் பயணநெறி தொழில் நுட்பம், போர் தந்திரம் உள்ளிட்ட கடல் பரப்பு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளை இரு நாட்டு கடற்படைப்பிரிவுகள் மேற்கொண்டுள்ளன.