2023ஆம் ஆண்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார செயல்பாட்டில் பல்வேறு குறியீடுகள் தொடர்ந்து வளர்ச்சி
2024-01-22 15:00:42

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாடுகளின் பல்வேறு குறியீடுகள் பொதுவாக மீட்சியடைந்து சீராக வளர்ந்து வருகின்றன.

இதனிடையில், 2023ஆம் ஆண்டில், சீனாவில் ஆண்டுக்கு வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு 2022ஆம் ஆண்டை விட 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் உற்பத்தி மீட்சி மேலும் மேம்பட்டுள்ளது. விற்பனை நிலையில், கடந்த ஆண்டின் அக்டோபர் முதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உள்நாட்டு வர்த்தகக் குறியீடு தொடர்ந்து மீண்டு வருகிறது. கடந்த டிசம்பரில் இது 51.4 சதவீதத்தை எட்டி, முந்தைய மாதத்தை விட 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி குறியீடு தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளது. அதோடு, வர்த்தகமும் தெளிவாக மேம்பட்டுள்ளது.