அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் இலிருந்து விலகுவதாக ரான் டிசாண்டிஸ் அறிவிப்பு
2024-01-22 11:31:53

சி என் என் என்ற அமெரிக்கச் தொலைக்காட்சி நிறுவனம் ஜனவரி 21ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, புளோரிடா மாநிலத்தின் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் இலிருந்து விலகுவதாகவும், இத்தேர்தலில் டொனல்ட் டிரம்ப்க்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார்.

முன்னதாக, அயோவா மாநிலத்தில் குடியரசு கட்சிக்குள் தேர்தலில் ரான் டிசாண்டிஸ் 21.2 விழுக்காடான ஆதரவுடன் 2வது இடத்தில் வகித்தார். ஆனால், புதிதாக நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் குடியரசு கட்சி 23ஆம் நாள் நடத்தவுள்ள தேர்தலில் இவருக்கு ஆதரவு விகிதம் 6 விழுக்காடு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.