இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு
2024-01-22 20:04:19

இந்த அதிகரிப்பு விகிதம், ஜனவரி 2ஆவது வாரத்தில் நிகழ்ந்தது என்றும் ஜனவரி 8 முதல் 14ஆம் தேதி வரையில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் 18 நாள்களில் 6,689 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 88 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு பாதிப்புகள் பதிவாகின, இப்பாதிப்பினால் 57 பேர் உயிரிழந்தனர்.