2024இல் சீனாவின் பசுமைமயமாக்குதல் திட்டம்
2024-01-22 20:11:45

2024ஆம் ஆண்டில், சீனாவில் அறிவியல் வழிமுறையில் பெரிய அளவிளான பசுமைமயமாக்குதல் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக சீனத் தேசிய வனத்துறை பணியகம் ஜனவரி 22ஆம் நாள் தெரிவித்தது. நாடு முழுவதிலும் பசுமைமயமாக்கும் நிலத்தின் பரப்பளவு சுமார் 66இலட்சத்து 67ஆயிரம் ஹெக்டரை எட்டும். இதில், 6இலட்சத்து 67ஆயிரம் ஹெக்டர் வனங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சீனாவில் காடு மற்றும் புல் வளர்ப்பு மூலம் பசுமைமயமாக்கப்பட்ட நில அளவு, 83இலட்சம் ஹெக்டரை எட்டியது. சுமார் 19இலட்சம் ஹெக்டர் பாலைவன நிலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.