அமெரிக்க குளிர்கால புயலில் 89 பேர் உயிரிழப்பு
2024-01-22 14:21:04

கடந்த வாரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயலால் ஏற்பட்ட விபத்துகளில், குறைந்தபட்சம் 89 பேர் உயிரிழந்தனர் என்று ஜனவரி 21ஆம் நாள் அமெரிக்காவின் கொலம்பியா ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.

மேலும் வேறு சில இறப்புகள் இந்த வானிலை தொடர்பானவையா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், தற்போதைய உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.