பன்னாட்டு திறமைகள் ஹாங்காங்கிலிருந்து பெருமளவில் வெளியேற்றவில்லை
2024-01-22 20:11:57

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின், வெளிநாட்டு செய்திஊடங்கங்களால் கூறப்படும் பன்னாட்டு திறமைகள் ஹாங்காங்கிலிருந்து பெருமளவில் வெளியேற்றியுள்ளனர் என்ற கூற்றை மறுத்தார். தொடர்புடைய கருத்துகளுக்கு, ஆதாரம் ஏதுமில்லை. பொது மக்கள் மற்றும் பொது அப்பிபிராயத்தைத் தவறான வழிக்குக் கொண்டு செல்லும் கூற்று என்று அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது சர்வதேச திறமைசாலிகள் மீது ஹாங்காங்கிற்கு வலிமையான ஈர்ப்பு ஆற்றல் உண்டு. சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் புள்ளிவிவரங்களின் படி 2022ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை ஹாங்காங்கின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, உண்மையான நிலைமை தான் என்றும் வாங்வென்பின் சுட்டிக்காட்டினார்.