உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் கிளாஸ் ஸ்வாப்: போதுமான ஞானங்களுடன் சவால்களைச் சமாளிக்கும் சீனா
2024-01-22 11:10:33

உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், நிர்வாகத் தலைவருமான கிளாஸ் ஸ்வாப் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சீனப் பொருளாதார வளர்ச்சி குறித்து கூறுகையில், சீனப் பொருளாதார வளர்ச்சி பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. 1979ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, இன்றைய மதிப்பில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. அப்போது, பொருளாதாரம் அவ்வளவாக வளர்ச்சி அடையாத நாடாக சீனா திகழ்ந்தது. ஆனால் தற்போது பல தொழில் நுட்பத் துறைகளில் சீனா முன்னணியில் இருக்கிறது என்றார். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை சீனா தேடிக் கண்டுபிடிக்க முடிக்கிறது. தற்போது, அனைத்து நாடுகளும் வெவ்வேறு காரணங்களால் பொருளாதார இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இருப்பினும், சீனா போதுமான ஞானங்களுடன் தற்போதைய பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.