2023-இல் சீனாவின் வேளாண்மை மற்றும் கிராமப்புறத் துறை சீரான வளரச்சி
2024-01-23 20:24:11

2023ஆம் ஆண்டில், சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிலைமை, பலமுறை இயற்கைச் சீற்றங்கள் ஆகிய அறைக்கூவல்களுக்கு மத்தியில், சீனாவின் வேளாண்மை மற்றும் கிராமப்புறத் துறை நிதானமாக வளர்ச்சி அடைந்தது என்று சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகம் 23ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த ஆண்டில், சீனாவின் தானிய உற்பத்தி அமோக அறுவடை பெற்றதுடன், விளைச்சல் அளவு வரலாற்றில் கண்டிராத பதிவை எட்டியது. சோயா அவரை எண்ணெய் பயிர்கள் பரப்பளவு அதிகரித்ததன் மூலம் தெளிவான பலன்கள் கிடைத்துள்ளன. இதனால், முக்கிய வேளாண் பொருட்களின் விநியோகம் உறுதிசெய்யப்பட்டது என்று வேளாண்மை மற்றும் கிராமப்புறத் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களின் உதவியுடன், நவீன வேளாண்மை கட்டுமானம் நிதானமாக முன்னேறி வருகின்றது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட விவசாய விதைகளின் தர வளத்துக்கான மிகப்பெரிய அளவிலான கணக்கெடுப்பு இவ்வாண்டில் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளும் மேலும் விரிவடைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.