ஒரே ஏவூர்தி மூலம் 5 செயற்கைக்கோள்களை ஏவியது சீனா
2024-01-23 15:04:47

லீஜியன்-ஒன்று வைய்3 (Lijian-1 Y3)ஏவூர்தி மூலம் 5 செயற்கைக் கோள்கள் செவ்வாய்கிழமை நண்பகல் சீனாவின் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவுத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது, இந்த செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் சேர்ந்து சுற்றி வருகின்றன. வணிக ரீதியாக பயன்படுத்தும் நோக்கில் லீஜியன் ஏவூர்தி 3ஆவது முறையாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.