ரஷிய-இந்திய வர்த்தகத் தொகை 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்
2024-01-23 15:25:40

2023ஆம் ஆண்டின் முதல் 11 திங்கள்காலத்தில், ரஷிய-இந்திய வர்த்தக அளவு, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.9 மடங்கு அதிகரித்து, 59.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இந்திய வணிக மற்றும் தொழில் துறையின் தரவுகளை மேற்கோள் காட்டி, ஆர்.ஐ.ஏ ரஷிய சர்வதேச செய்தி ஊடகம் 22ஆம் நாள் இச்செய்தியை வெளியிட்டது.

ரஷியாவுக்கான இந்திய ஏற்றுமதி அளவு முந்தைய ஆண்டில் இருந்ததை விட 1.4 மடங்கு அதிகரித்து, 3.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இந்தியாவுக்கு ரஷியாவின் ஏற்றுமதி 1.9 மடங்கு அதிகரித்து, 56 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.