தென்கொரியாவில் ஒரு சந்தையில் ஏற்பட்ட கடும் தீ விபத்து
2024-01-23 19:28:48

ஜனவரி 22ஆம் நாள் இரவு தென்கொரியாவில் உள்ள ஒரு பாரம்பரிய சந்தையில் ஏற்பட்ட கடும் தீ விபத்தில், இதில் உள்ள 227 கடைகள் அனைத்தும் எரிந்து நாசமகின.

தலைநகர் சியோலுக்கு தெற்கே 170 கி.மீ. தொலைவில் உள்ள சுட்சுவாங் மாவட்டத்தைச் சேர்ந் இந்தப் பாரம்பரிய கடல் பொருட்கள் சந்தையில், அன்று இரவு சுமார் 11:08 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 361 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 45 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன், தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.