கூரையில் சூரிய தகடு நிறுவும் திட்டத்தை இந்தியா அறிவிப்பு
2024-01-23 14:45:23

நாடளவில் ஒரு கோடி வீடுகளின் கூரையில் சூரிய தகடு நிறுவும் திட்டத்தை இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 22ஆம் நாள் அறிவித்துள்ளார்.

இந்திய குடும்பங்களுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை விநியோகிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவதோடு, எரியாற்றல் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்றும் மோடி தெரிவித்தார்.