இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: இஸ்ரேல் செய்தி ஊடகம்
2024-01-23 09:58:33

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்துக்கிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பொது ஒளிபரப்பு வானொலி நிறுவனம் 22ஆம் நாள் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.

ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதைக் கவனித்த பிறகு, இப்பேச்சுவார்த்தை முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இஸ்ரேல் படையினர்களை விட, காவலில் வைக்கப்பட்ட அனைத்து இஸ்ரேலியர்களையும் விடுவித்தல், நீண்டகால போர் நிறுத்தம், காசா பிரதேசத்தின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படையினர் வெளியேறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இஸ்ரேலின் புதிய முன்மொழிவில் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரின் கூற்றை இச்செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.

இம்முன்மொழிவுக்கான ஹமாஸின் பதிலை இஸ்ரேல் தரப்பு அன்றே பெறக் கூடும். ஆனால், காசா பிரதேசத்தின் தென் பகுதியிலுள்ள கான் யூனிஸில் இஸ்ரேல் பெருமளவிலான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஹமாஸின் பதில் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உண்டு என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.