ஈரான் அரசுத் தலைவர் ரைசி 24ஆம் நாள் துருக்கியில் பயணம்
2024-01-24 10:33:45

துருக்கி அரசுத் தலைவர் தயீப் எர்டோகனின் அழைப்பின் பேரில், ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசி ஜனவரி 24ஆம் நாள் துருக்கியில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று, உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள் துருக்கி அரசு தலைவர் மாளிகையின் செய்தி பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த பயணத்தின் போது, துருக்கி-ஈரான் உயர் நிலை ஒத்துழைப்புக் கமிட்டியின் எட்டாவது கூட்டம் துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இருநாட்டு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.

மேலும், தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் நிலைமைகள் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.