39.8லட்சம் கோடி யுவான் வருவாய் ஈட்டிய மத்திய அரசுசார் நிறுவனங்கள்: சீனா
2024-01-24 14:58:27

2023ஆம் ஆண்டு சீனாவின் மத்திய அரசுசார் நிறுவனங்களின் வருவாய் 39லட்சத்து 80ஆயிரம் கோடி யுவானை ஈட்டியுள்ளது. மொத்த லாபத் தொகை 2லட்சத்து 60ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது.

மேலும் 2023ஆம் ஆண்டின் இறுதி வரை, சீன மத்திய அரசுசார்  நிறுவனங்களின் மொத்த சொத்துத் தொகை 86லட்சத்து 60ஆயிரம் கோடி யுவானை எட்டி முந்தைய ஆண்டை விட, 6.4விழுக்காடு அதிகமாகும்.