இலங்கையில் ஜனவரியில் பணவீக்கம் உயர்வு
2024-01-24 19:50:02

இலங்கையில் ஜனவரியில் பணவீக்க விகிதம் 7 விழுக்காட்டுக்கும் மேல் உயர வாய்ப்புண்டு என்று அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

2024-இன் முதலாவது நாணயக் கொள்கை பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் கூறுகையில், வேட் வரி உயர்வு, விநியோக பிரச்னை காரணமாக காய்கறிகள் விலை உயர்வு ஆகியவையே பணவீக்க உயர்வுக்குக் காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் வேட் சீர்திருத்த மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வேட் வரியானது 15 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.