தாய்லாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் – இலங்கை ஒப்புதல்
2024-01-25 19:26:48

இலங்கை, தாய்லாந்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசின் தகவல் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே தாக்கல் செய்தார்.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விநியோகத் திறனை மேம்படுத்துவது, வெளிநாட்டு நேரடி முதலீடை ஈர்ப்பது, இலங்கை பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வெளிநாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவது ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவை என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தாய்லாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு 2018இல் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர், இரு நாடுகளிடையே நடைபெற்ற 9 சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.