புறப்படும் முன்பு சக்கரம் கழன்று விழுந்த அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757ரக விமானம்
2024-01-25 10:05:21

அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757ரக விமானம் ஒன்று அட்லாண்டாவில் 20ஆம் நாள் புறப்படுவதற்கு முன்பு, அதன் முன் சக்கரம் கழன்று விழுந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பயணியர் விமானத்தில் 172பயணிகள், 2 விமானிகள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். யாரும் காயமடையவில்லை என்று இவ்விமான நிறுவனம் ஜனவரி 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த போயிங் 757ரக விமானம் மறுநாளில் மீண்டும் சேவையளிக்கத் துவங்கும் என்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.