2023-இல் சீனாவில் புதிய எரியாற்றல் துறை விரைவான வளர்ர்சி அடைந்தது
2024-01-25 19:21:15

சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் சார்பில், 2023ஆம் ஆண்டு சீன எரியாற்றல் துறையில் முக்கிய திட்டங்களில் முதலீடுகள் நிறைவேற்றப்பட்ட விவரங்கள் ஜனவரி 25ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு முழுவதும் எரியாற்றலுக்கான முதலீடு விரைவான அதிகரிப்பை நிலைநிறுத்தியது.

25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் அதிகாரி ட்சாங் சிங் கூறுகையில், கடந்த ஆண்டில், இத்துறையில் முக்கிய திட்ட முதலீடுகளின் மொத்த அளவு சுமார் 2இலட்சத்து 80ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இதில், சூரிய மின்சார உற்பத்தி மற்றும் காற்று மின்சார உற்பத்திக்கா முதலீட்டு அளவுகள், முறையே 67ஆயிரம் கோடி யுவானையும் 38ஆயிரம் கோடி யுவானையும் தாண்டின என்று தெரிவித்தார்.

தவிரவும், உலகின் தூய்மை எரியாற்றல் வளர்ச்சிக்கு சீனா தவிர்க்க முடியாத சக்தி என்றும் அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டில், உலக முழுவதிலும் உள்ள புதுப்பிக்கத்தக்க எரியாற்றல்கள் மூலம் புதிதாக அதிகரித்த உற்பத்தி சாதனங்களின் மொத்த திறன் 51கோடி கிலோவாடை எட்டியது. இதில், சீனாவின் பங்கு 50க்கும் மேல் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.