இஸ்ரேல் மீது அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமா இல்லையா?: சர்வதேச நீதிமன்றம் 26ஆம் நாள் அறிவிப்பு
2024-01-25 15:17:57

காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டி, தென்னாப்பிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கு தொடுத்துள்ளது. இது குறித்து, இஸ்ரேல் மீது அவசர நவவடிக்கை மேற்கொள்ளப்படுமா இல்லையா என்று சர்வதேச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம் ஜனவரி 26ஆம் நாள் 12 மணிக்கு  அறிவிக்கவுள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் நாள் சர்வதேச நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் தென்னாப்பிரிக்கா 84 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஒன்றை சுமர்ப்பித்துள்ளது.